வடமதுரை காளியம்மன் கோயில் திருவிழா: பக்தர்கள் நேர்த்திக்கடன்
ADDED :1032 days ago
வடமதுரை: வடமதுரை காளியம்மன் கோயில் திருவிழாவில் நேற்று அக்கினிச்சட்டி, பால்குடம், முளைப்பாரி எடுத்தல் போன்ற நேர்த்திக்கடன் வழிபாடுகள் செய்தனர்.
இங்கு மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் இத்திருவிழா கடந்த மார்ச் 17ல் சாட்டுதலுடன் துவங்கியது. நேற்றுமுன்தினம் அதிகாலையில் பகவதியம்மன், காளியம்மன், மாரியம்மன் கரகம் பாலித்து அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் கோயில் வந்தது. நேற்றுமுன்தினம் வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் தங்கைக்கு சீர் வழங்கும் நிகழ்வும், நேற்று பொங்கல் வைத்தல், அக்கினிச்சட்டி, பால் குடம், முளைப்பாரி எடுத்தல் போன்ற நேர்த்திக்கடன் வழிபாடுகளை பக்தர்கள் செய்தனர். இறுதியாக அம்மன் கங்கை செல்லும் நிகழ்வுடன் திருவிழா நிறைவடைந்தது.