ராஜா அண்ணாமலைபுரம் கற்பக விநாயகர் கோயிலில் கும்பாபிஷேகம்
ADDED :1032 days ago
சென்னை : ராஜா அண்ணாமலைபுரம் கற்பக விநாயகர் கோவிலில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
ராஜா அண்ணமலைபுரம், இரண்டாவது தெருவிலுள்ள, சித்தி புத்தி உடனுறை கற்பக விநாயகர் கோவிலில், கும்பாபிஷேக சிறப்பு வழிபாடு, கடந்த 23ம் தேதி துவங்கியது. நேற்று மாலை வரை, சுவாமிக்கு பூஜைகள், ஹோமங்கள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடந்தன. இந்நிலையில், இன்று காலை 9:15 மணி முதல் 10:15 மணி வரை , காஞ்சி காமகோடி பீடாதிபதி முன்னிலையில், சுவாமிக்கு அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தொடர்ந்து, இரவு 7:00 மணிக்கு சுவாமி வீதி உலா நடைபெறுகிறது.