காளஹஸ்தி சிவன் கோயிலில் முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்மராவ் மகள் தரிசனம்
ADDED :1083 days ago
காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோயிலுக்கு மறைந்த முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்மராவ் மகளும் தெலுங்கானா எம்.எல்.சி யும் ஆன எஸ்.வாணி நேற்று ஞாயிற்றுக்கிழமை ஞான பிரசுனாம்பிகை சமேத ஸ்ரீகாளஹஸ்தீஸ்வர சுவாமியை தரிசிக்க கோயிலுக்கு வந்தவரை கோயில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு. தாரக சீனிவாலு மற்றும் கோயில் அதிகாரிகள் சிறப்பு வரவேற்பு ஏற்பாடு செய்ததோடு தரிசன ஏற்பாடுகளையும் செய்தனர்.கோயிலுக்குள் சென்றவர்கள் சாமி தரிசனம் செய்ததை தொடர்ந்து கோயில் வளாகத்தில் உள்ள குருதட்சிணாமூர்த்தி சன்னதி அருகில் கோயில் வேதப் பண்டிதர்கள் சிறப்பு ஆசிர்வாதம் செய்தனர் மேலும் சுவாமி அம்மையார்களின் தீர்த்தப் பிரசாதங்களையும் சாமி படத்தையும் வழங்கினர்.