உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசாயி கோயிலில் பிரம்மோற்சவ கொடியேற்றம்!

ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசாயி கோயிலில் பிரம்மோற்சவ கொடியேற்றம்!

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசாயி கோயிலில் புரட்டாசி பிரம்மோற்சவ விழா  கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதையொட்டி மாலையில் சுவாமி வீதியுலா நடக்கிறது. விழா நாட்களில் காலையில் மண்டபகப்படி, மண்டங்களில் எழுந்தருளல் நடக்கிறது. இரவு சந்திர பிரபை, அனுமார், தங்க சேஷம், தங்க கருட சேவை, அன்னம், குதிரை,யானை வாகனங்களில் வீதியுலா நடக்கிறது. முக்கிய விழா 26ம் தேதி காலை 6மணிக்கு, திருவோணம் நட்சத்திரத்தன்று தேரோட்டம் நடக்கிறது. ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன் தலைமையில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !