வடகாட்டுப்பட்டியில் 31அடி உயர மகாகாளியம்மனுக்கு கும்பாபிஷேகம்
ADDED :894 days ago
சாணார்பட்டி, சாணார்பட்டி அருகே வடகாட்டுப்பட்டியில் 31அடி உயர மகாகாளியம்மன் சிலைக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.சாணார்பட்டி அருகே வடகாட்டுப்பட்டி சித்தர் பீடத்தில் ஸ்ரீமகாகாளியம்மனுக்கு 31அடி உயரமுள்ள சிலை அமைக்கப்பட்டது. அதர்க்கு கும்பாபிஷேக நிகழ்ச்சி கடந்த மார்ச் 24 கோபூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து 5 கால யாக வேள்வி பூஜைகள் நடந்தது. நேற்று காலை பல்வேறு புனித ஸ்தலங்களில் கொண்டுவரப்பட்ட புனித தீர்த்தங்கள் நிறைந்த குடங்கள் 31 அடி உயரமுள்ள மகா காளியம்மன் சிலையின் உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க தீர்த்தங்கள் காளியம்மன் சிலையில் ஊற்றப்பட்டு கருட தரிசனத்துடன் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்பு விழா குழு வினர் சார்பில் அன்னதானம் நடைபெற்றது.