உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் /  ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி கோவில் தெப்பல் உற்சவம்

 ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி கோவில் தெப்பல் உற்சவம்

ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி கோவில் தெப்பல் உற்சவம் நேற்று இரவு நடந்தது.


ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி கோவில் சித்திரை திருவிழா கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. பத்து நாட்கள் நடந்த விழாவில் நேற்று மதியம் மட்டையடி உற்சவம் நடந்தது. அதனை தொடர்ந்து, இரவு தெப்பல் உற்சவம் நடந்தது. முன்னதாக நித்திய புஷ்கரணி திருக்குளத்தில் தீர்த்தவாரி நடந்தது. இதில் உற்சவ மூர்த்தி யக்ஞவராகன்,ஸ்ரீதேவி, பூதேவியோடு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.  இதில் உள்ளூர், சுற்றுப்புற கிராமங்கள் மற்றும் வெளியூர்களில் இருந்து  ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நேற்று காலை கொடியிறக்கம் நடந்தது. இன்று 3ம் தேதி முதல் 8 ம் தேதி வரை 6 நாட்கள் விடையாற்றி உற்சவம் நடக்கிறது. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !