உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமநவமி சாய் ஜெயந்தி விழா : சாய்பாபா கோயில்களில் சிறப்பு ஆரத்தி வழிபாடு

ராமநவமி சாய் ஜெயந்தி விழா : சாய்பாபா கோயில்களில் சிறப்பு ஆரத்தி வழிபாடு

ஷீரடி சாய்பாபா கோயில்களில் ராமநவமி சாய் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. அதையொட்டி, காலை, வேள்வி பூஜைகள், சங்காபிஷேகம், பாலாபிஷேகம், சிறப்பு அலங்கார பூஜைகள் நடந்தன. ஷீரடி சாய்பாபா சிறப்பு அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, சிறப்பு ஆரத்தி பூஜையும், சிறப்பு பஜனையும் நடந்தது.

திருக்கோவிலூர் வடிவேல் நகரில் உள்ள சீரடி குபேர சாய்பாபா கோவிலில் அவதார திருநாளை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. வளாகத்தில் மகாயாக பூஜை, சுவாமிக்கு மகா  அபிஷேகம், ஆரத்தி பூஜை நடைபெற்றது.

மதுக்கரை கடை வீதியில் செல்வ வினாயகர், ஷீரடி சாய்பாபா கோவிலில் சாய்பாபா ஜெயந்தி விழா நதடைபெற்றது. அதிகாலை, 5:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் சாய்பாபா ஜெயந்தி விழா துவங்கியது. தொடர்ந்து பெருந்திரு மஞ்சனம், பேரொளி வழிபாடு, பாபாவின் சத் சரிதை பாராயணம், ஆரதி நடைபெற்றது.

மேட்டுப்பாளையம் ரோடு தொப்பம்பட்டி சுமங்கலி நகரில் உள்ள ஸ்ரீ குபேர சீரடி சாய்பாபா கோவிலில் நடைபெற்ற சிறப்பு ஆரத்தி வழிபாடில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !