கணக்கம்பாளையம் பகவதி அம்மன் குண்டம் திருவிழா
ADDED :1034 days ago
கணக்கம்பாளையம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற 100 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த பகவதி அம்மன் கோயில் குண்டம் திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
கணக்கம்பாளையம் ஊராட்சியில் பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் குண்டம் திருவிழாவையொட்டி நேற்று அதிகாலை 4 மணியளவில் அம்மை அழைப்பு, அம்பாள் ஊஞ்சலாடுதல் மற்றும் அக்னி கும்பம் எடுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து குண்டம் இறங்கும் நிகழ்வு நடைபெற்றது. 60 அடி குண்டத்தில் பூசாரி பவுன் என்கிற பழனிச்சாமி மாலை அணிந்து முதலில் தீ மிதித்தார். அதனை தொடர்ந்து ஆண்கள், பெண்கள் என ஏராளமான பக்தர்கள் குண்டத்தில் தீ மிதித்து தங்களின் நேர்த்திக்கடனை செலுத்தினர்.