திருப்பரங்குன்றம் கோயில்களில் ராமநவமி சிறப்பு பூஜை
ADDED :977 days ago
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் வீர ஆஞ்சநேயர் சுவாமி கோயிலில் மார்ச் 24ல் துவங்கிய ராம நவமி விழாவில் தினம் சிறப்பு அபிஷேகம், பூஜை, ஆன்மிக சொற்பொழிவுகள், பரத நாட்டியம், நாதஸ்வரம், தவில் இன்னிசை நிகழ்ச்சிகள் நடந்தது. இன்று காலை சாதுக்கள், சான்றோர்கள், பக்தர்கள் பங்கேற்ற ஸ்ரீ ராம நாம ஜெபம் நடந்தது. மஹா சுதர்சன ஹோமம் முடிந்து மூலவர் ஆஞ்சநேயருக்கு தங்க கவசம் சாத்துப்படியானது. வெள்ளி கவச அலங்காரத்தில் உற்சவர்கள் சீதை, லட்சுமணர், ஆஞ்சநேயருடன் ராமர் அருள்பாலித்தார்.
கூடல்மலைத்தெரு சூட்டுக்கோல் ராமலிங்க விலாசத்தில் தனி சன்னதியில் எழுந்தருளியுள்ள 12 அடி உயர ஆஞ்சநேயருக்கு அபிஷேகம், பூஜை முடிந்து, வடைமாலை சாத்துப்படியாகி தீபாராதனை நடந்தது. திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் தனி சன்னதியில் எழுந்தருளி ஆஞ்சநேயருக்கு அபிஷேகம், பூஜை நடந்தது.