காஞ்சி சங்கரமடத்தில் வசந்த நவராத்திரி நிறைவு
ADDED :1027 days ago
திருநெல்வேலி: நெல்லை டவுன் காஞ்சி சங்கரமடத்தில் வசந்த நவராத்திரி உற்சவம் நேற்றுடன் நிறைவடைந்தது. நெல்லை டவுன் காஞ்சி சங்கரமடத்தில் வசந்த நவராத்திரி உற்சவம் மற்றும் ஸ்ரீ ராமநவமி விழா நேற்று நடந்தது. நவராத்திரி உற்சவத்தில்அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள், அலங்கார தீபாராதனைநடந்தது. சுபாஸினி பூஜை, அன்னதானம் நடந்தது. மாலையில் சகஸ்ரநாம அர்ச்சனை நடந்தது. ஏற்பாடுகளை காஞ்சி சங்கரமடம் மேலாளர் நாராயணன் செய்திருந்தார்.