உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செங்குறிச்சி லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் அனுமன் மகோற்சவம்

செங்குறிச்சி லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் அனுமன் மகோற்சவம்

உளுந்தூர்பேட்டை: செங்குறிச்சி ஸ்ரீ கனகவல்லி நாயிகா ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் 47ம் ஆண்டு ஸ்ரீராம நவமி அனுமன் மகோற்சவம் நடந்தது.

உளுந்தூர்பேட்டை தாலுகா செங்குறிச்சி கிராமத்தில் உள்ள ஸ்ரீ கனகவல்லி நாயிகா ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் 47ம் ஆண்டு ஸ்ரீராம நவமி அனுமன் மகோற்சவம் நடந்தது. அதனையொட்டி நேற்று காலை 10.30 மணியளவில் ஸ்ரீ ராம நவமி விசேஷ திருமஞ்சனம் நடந்தது. அதனை தொடர்ந்து நேற்று இரவு 9.30 மணியளவில் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி பெருமாள் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அனுமன் வாகனத்தில் வீதி உலா நடந்தது. பின்னர் சுவாமிக்கு தீபாரதணை வழிபாடு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !