உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீரங்கம் ஆதி பிரம்மோத்ஸவம் 4ம் நாள் : பல்லக்கில் நம்பெருமாள் உலா

ஸ்ரீரங்கம் ஆதி பிரம்மோத்ஸவம் 4ம் நாள் : பல்லக்கில் நம்பெருமாள் உலா

திருச்சி:  108 வைணவ திவ்யதேசங்களில் பூலோக வைகுண்டமான ஸ்ரீரங்கத்தில் நடைபெற்று வரும் ஆதி பிரம்மோத்ஸவத்தின் நான்காம் திருநாளான இன்று காலை 8.00 மணியளவில் உற்சவர் ஸ்ரீநம்பெருமாள் கண்ணாடி அறையிலிருந்து பல்லக்கில் புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து ரெங்கவிலாச மண்பத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மாலை  6.30 மணியளவில் மேற்படி மண்டபத்திலிருந்து கருட வாகனத்தில் புறப்பட்டு சித்திரை வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து கண்ணாடி அறை சென்றடைகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !