உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காளஹஸ்தி சிவன் கோயிலுக்கு புதிய ஆம்புலன்ஸ் காணிக்கை

காளஹஸ்தி சிவன் கோயிலுக்கு புதிய ஆம்புலன்ஸ் காணிக்கை

காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம், ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு  சுமார் பத்து லட்சம் ரூபாய் மதிப்பிலான புதிய நவீன ஆம்புலன்ஸ் வாகனத்தை தனியார் வங்கியினர் காணிக்கையாக வழங்கினார்.


ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய  வரும் பக்தர்களை அவசரக் காலத்தில் ஏற்றிச் செல்வதற்காக கோயில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு தாரக சீனிவாசுலு மற்றும் தேவஸ்தான அதிகாரிகள் முன்னிலையில்  தேவஸ்தானத்திற்கு ஆம்புலன்ஸ் வாகனத்தை தனியார் வங்கியினர் காணிக்கையாக வழங்கினார். அவசர காலங்களில் நவீன வசதிகளுடன் (கரூர் வைஸ்யா) வங்கி ஆம்புலன்ஸ் வழங்கியுள்ளது.இந்த ஆம்புலன்ஸ் யில் ஆக்சிஜன் சிலிண்டர்கள், எமர்ஜென்சி சிஸ்டம் கண்காணிப்பு(மானிடரிங்),உள்ளது.மேலும் பக்தர்களை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஏற்றதாக உள்ளது என அஞ்சூரு.சீனிவாசுலு  தெரிவித்தார்.  இதேபோல், தேவஸ்தானத்திற்கு வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு வசதியாக நான்கு சக்கர நாற்காலிகள் 4யை தேவஸ்தானத்திற்கு  வழங்கினர்.. முன்னதாக வங்கி  அதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும் சிறப்பு தரிசன ஏற்பாடுகளை செய்ததோடு ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரரையும் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரையும் சாமி தரிசனம் செய்தவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்ததோடு கோயில் தீர்த்த பிரசாதங்களையும் சாமி படத்தையும் கோயில் சார்பில் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !