உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செட்டிபுண்ணியத்தில் ராம நவமி விமரிசை

செட்டிபுண்ணியத்தில் ராம நவமி விமரிசை

மறைமலை நகர்:சிங்கபெருமாள் கோவில் அடுத்த செட்டிபுண்ணியம் கிராமத்தில், பழமையான தேவநாத பெருமாள் கோவில், யோக ஹயக்ரீவர் -- செண்பகவல்லி தாயார் கோவில் உள்ளது. இந்த கோவிலின் கோதண்டராமர் - சீதா, லட்சுமணன் சன்னிதி உள்ளது. நேற்று ராம நவமியை முன்னிட்டு, காலை 11:00 மணிக்கு, உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அர்ச்சனைகள் நடந்தன. நேற்று மாலை, உற்சவர் கோதண்டராமர் உடனுறை சீதா, லட்சுமணன், ஆஞ்சநேயர் ஆகியோர், வேத பாராயணம் மற்றும் மங்கல வாத்தியம் முழங்க, நான்கு மாட வீதிகளில் வலம் வந்து கோவிலை அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !