வடக்குவாசல் செல்வி அம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் வழிபாடு
ADDED :1032 days ago
சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே அ.காளாப்பூர் வடக்குவாசல் செல்வி அம்மன் கோயில் பங்குனி பொங்கல் வழிபாடு நடந்தது. ஆண்டுதோறும் மூவன்பட்டி கிராமத்தார்கள் நேர்த்திக் கடனுக்காக இக்கோயிலில் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடத்துவது வழக்கம். நேற்று வழக்கம்போல் கோயில் முன்பாக பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து சேவல், ஆடுகள் பலியிடப்பட்டு நேர்த்திக்கடன் கொடுக்கப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.