சுப்ரமணியர் சுவாமி கோயிலில் பங்குனி உத்திர விளக்கு பூஜை
ADDED :1017 days ago
கமுதி: கமுதி அருகே நீராவி கரிசல்குளம் கிராமத்தில் வள்ளிதெய்வானை தேவசேனா சமேத சுப்ரமணியர் சுவாமி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 26ம் தேதி கொடியேற்றம், காப்பு கட்டுதலுதடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு கோயில் வளாகத்தில் 108 விளக்குபூஜை நடந்தது.சுப்பிரமணியர் சுவாமிக்கு சிறப்புபூஜை,அபிஷேகம் நடந்தது. இதில் கமுதி அதனை சுற்றியுள்ள கிராமமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.பின்பு முக்கிய நிகழ்ச்சியாக ஏப்.4 தேதி பால்குடம்,அக்னிசட்டி, வேல்குத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.