கரிவரதராஜ பெருமாள் கோவிலில் பிரம்மோத்ஸவ விழா துவக்கம்
ADDED :1017 days ago
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையத்தில் கரி வரதராஜ பெருமாள் கோவிலில்,18ம் ஆண்டு பிரம்மோத்ஸவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
முதல் நாள் பெருமாள், சரஸ்வதி அலங்காரத்தில், அன்ன வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று சிம்ம வாகனத்தில், யோக நரசிம்ம அலங்காரத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து, முத்து பந்தல், அனுமந்த வாகனம், கருட வாகனம், யானை வாகனம், குதிரை வாகனம், சேஷ வாகனங்களில் பெருமாள் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இம்மாதம், 10ம் தேதி பல்லக்கு சேவை, சந்தன சேவை, தீர்த்தவாரி சாற்றுமுறை நடக்கிறது. விழாவையொட்டி, தினமும் மதியம், 2:00 மணி முதல் மாலை, 6:00 மணி வரை திவ்ய பிரபந்த சேவா காலம் நடக்கிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கரிவரதராஜ பெருமாள் திருக்கோவில் அறங்காவலர்கள் செய்து வருகின்றனர்.