சாரதாம்பாள் கோவிலில் வசந்த நவராத்திரி நிறைவு விழா
ADDED :1031 days ago
புதுச்சேரி: புதுச்சேரி சாரதாம்பாள் கோவிலில், வசந்த நவராத்திரி நிறைவு விழா மற்றும் ராமநவமி உற்சவம் நேற்று நடந்தது.
புதுச்சேரி எல்லைப்பிள்ளை சாவடி 100 அடி சாலையில் சிருங்கேரி சிவகங்கா மடம், சாரதாம்பாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் 17ம் ஆண்டு வசந்த நவராத்திரி விழா கடந்த 22ம் தேதி துவங்கியது. இதை தொடர்ந்து, தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வந்தன. வசந்த நவராத்திரி நிறைவு விழா மற்றும் ராம நவமி உற்சவம் நேற்று நடந்தது. இதையொட்டி, மாலை 6:30 மணிக்கு கன்னிகா பூஜை மற்றும் சாரதாம்பாள் அம்மன் புஷ்ப அலங்காரத்துடன், சகஸ்ர நாம பூஜை நடந்தது.