வெள்ளி புருஷா மிருக வாகனத்தில் சுவாமி புறப்பாடு
ADDED :888 days ago
சென்னை, மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி பெருவிழா, கடந்த மாதம் 28ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. 30ல், அதிகார நந்தி சேவை நடந்தது.நேற்று காலை, வெள்ளி புருஷா மிருகம், சிங்கம், புலி வாகனங்கள் சுவாமி எழுந்தருளினார். இரவு, நாகம், காமதேனு, ஆடு வாகனங்களின் புறப்பாடு நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமியை தரிசித்தனர். திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவிலில், நேற்று காலை சந்திரசேகரர் தொட்டி விழா, எமதருமருக்கு அருளல் நிகழ்வு நடந்தது. இரவு ரிஷப வாகனத்தில் சந்திரசேகரர் எழுந்தருளி அருள்பாலித்தார்.