உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 4 ந்தேதி பங்குனி உத்திரம் மலைக்கோவிலில் முதல் தேரோட்டம்

4 ந்தேதி பங்குனி உத்திரம் மலைக்கோவிலில் முதல் தேரோட்டம்

தேவகோட்டை: தேவகோட்டையில் கருதாவூரணி வடக்கு பகுதியில் சுமார் 75 அடி உயரத்தில் தண்டாயுதபாணி மலைக்கோவில் கட்டப்பட்டுள்ளது. 12 ஆண்டுகளாக தண்டாயுதபாணிக்கு தினமும் பூஜைகளும், கார்த்திகை, சஷ்டி ஆகிய தினங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. இக்கோவிலில் முதல் முறையாக தேரோட்டம் நடைபெற உள்ளது. இக்கோவிலுக்கு புதிதாக 14 அடி உயரத்தில் மரத்தால் தேர் செய்யப்பட்டு உள்ளது. இந்த புதிய தேர் செய்யப்பட்டு வரும் ஏப். 4 ந்தேதி பங்குனி உத்தரத்தன்று வள்ளி தெய்வானை சமேதராக முருகன் எழுந்தருளும் முதல் தேரோட்டம் நடைபெற உள்ளது. பங்குனி உத்திரத்தன்று தண்டாயுதபாணிக்கு காலையில் சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. முதல் தேரோட்டத்திற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !