வில்வாரணி நட்சத்திர கோவிலில் பங்குனி தேரோட்டம்
ADDED :934 days ago
திருவண்ணாமலை : கலசப்பாக்கம் அடுத்த வில்வாரணி நட்சத்திர கோவிலில், பங்குனி உத்திர விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழானை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது. தேரில் வள்ளி தெய்வானை சமேதராய் சுப்பிரமணியர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். நடந்த தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து வழிபட்டனர்.