குருத்தோலை ஞாயிறு; கிறிஸ்தவர்கள் பவனி
ADDED :935 days ago
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் கிறித்தவ ஐக்கிய குருத்தோலை ஞாயிறு பவனி நடந்தது. இதனை முன்னிட்டு இன்று காலை 8:15 மணிக்கு திரு இருதய பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இருந்து புறப்பட்ட குருத்தோலை பவனி, நகரின் முக்கிய வீதிகள் வழியாக திரு இருதய ஆண்டவர் சர்ச்சிற்கு வந்தடைந்தது. ஏராளமான இறைமக்கள் கையில் குருத்தோலை ஏந்தி வலம் வந்தனர். விழாவில் மறைவட்ட அதிபர் சந்தன சகாயம், சி.எஸ்.ஐ.சபைகுரு பால் தினகரன், திரு இருதய ஆண்டவர் சர்ச் ஜேம்ஸ் மற்றும் அருட்சகோதரிகள் பங்கேற்றனர். திருப்பலி நடந்து விழா நிறைவடைந்தது.