/
கோயில்கள் செய்திகள் / பிரம்மனுக்கு காட்சியளித்து மருந்தீஸ்வரர்: திருவான்மியூரில் தேரோட்டம் கோலாகலம்
பிரம்மனுக்கு காட்சியளித்து மருந்தீஸ்வரர்: திருவான்மியூரில் தேரோட்டம் கோலாகலம்
ADDED :989 days ago
திருவான்மியூர்: திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு சந்திரசேகரர் தேர் வீதி உலா நடந்தது.
திருவான்மியூர், மருந்தீஸ்வரர் கோவிலில் பங்குனி திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் நேற்று முன்தினம் இரவு ரிஷப வாகனத்தில் சந்திரசேகரர் எழுந்தருளி அருள்பாலித்தார். நேற்று இரவு, யானை வாகனத்தில் இறைவன் காட்சி அளித்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்திருவிழா இன்று நடைபெற்றது. காலை 6:00 மணிக்கு சந்திரசேகரர் தேரில் எழுந்தருளி பிரம்மனுக்கு காட்சியருளல் நடைபெற்றது. தொடர்ந்து தேர் பக்தர்களால் வடம் பிடிக்கப்பட்டு உலா வந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இன்று இரவு தியாகராஜர் வீதி உலா நடக்கிறது. வரும், 4ம் தேதி கல்யாண சுந்தரர் திருக்கல்யாணம் நடக்கிறது.