பட்டமங்கலம் பங்குனித் திருவிழா: பக்தர்கள் பால்குடம்
ADDED :954 days ago
திருக்கோஷ்டியூர்: திருப்புத்தூர் அருகே பட்டமங்கலம் அழகு சவுந்தரியம்மன் கோயில் பங்குனித் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம் எடுத்தனர்.
பங்குனி விழா மார்ச் 27ல் காப்பு கட்டி துவங்கியது. தினசரி இரவு அம்மன் திருவீதி உலா நடந்தது. நேற்று காலை மதியாத கண்ட விநாயகர் கோயிலிலிருந்து 108 பால் குடங்களுடன், அலகு குத்திய பக்தர்களுடன் பால்குட ஊர்வலம் துவங்கியது. முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலம் அழகு சவுந்தரி அம்மன் கோயில் வந்தடைந்தது. தொடர்ந்து அம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சிறப்புத் தீபாராதனை நடந்தது. நாளை மாலை தேர்த்திருவிழாவும், ஏப்.5ல் மஞ்சுவிரட்டும், ஏப்.6ல் தீர்த்தவாரியும் நடைபெறும்.