உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முத்துமாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா

முத்துமாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா

மேலுார்: மேலுார், சிலோன்காலணியில் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி மாத திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் மார்ச் 23 ல் காப்பு கட்டி விரதமிருந்தனர். அதனைத் தொடர்ந்து நேற்று நேற்று முருகன் கோயிலில் இருந்து பக்தர்கள் ஊர்வலமாக சென்று கோயில் முன்பு பூக்குழி இறங்கியும், மாவிளக்கு ஏற்றி நேர்த்திக்கடன் செலுத்தினர். அதனைத் தொடர்ந்து அம்மன் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இவ் விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !