அருணாசலேஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு: நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்
ADDED :1256 days ago
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், பங்குனி மாத வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு, ராஜகோபுரம் அருகே உள்ள பெரிய நந்தி பகவானுக்கு பால், சந்தன சிறப்பு அபிஷேகம் நடந்தது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில், நடைபெற்ற பங்குனி பிரதோஷ சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பிரதோஷத்தை முன்னிட்டு ராஜகோபுரம் அருகே உள்ள பெரிய நந்தி பெருமானுக்கு பால், சந்தனம் அபிஷேகம் மற்றும் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. மூன்றாம் பிரகாரத்தில் தங்க ரிஷப வாகனத்தில் உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலையார் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.