நிலக்கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா: அம்மன் உலா
ADDED :956 days ago
நிலக்கோட்டை: நிலக்கோட்டை நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட மாரியம்மன் கோயில் திருவிழா ஏப்ரல் 2ல் பொங்கல் வைத்து பக்தர்கள் வழிபட்டனர். அம்மன் சிம்ம வாகனத்தில் நகர்வலம் வந்தார். நேற்று பத்ரகாளியம்மன் மன்றம் மண்டகப்படியில் அம்மன் கொலு மண்டபத்தில் அமர்ந்து காட்சி அளித்தார். பக்தர்கள் அக்னி சட்டி கரும்புத் தொட்டில் பிரார்த்தனைகளை நிறைவேற்றினர். இன்று பால்குட அபிஷேகம் மாவிளக்கு பிரார்த்தனை நடைபெறுகிறது. அம்மன் ரிஷப வாகனத்தில் நகர்வலம் வருகிறார். நாளை பூ அலங்கார சப்பரத்தில் அம்மன் நகர் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.