பரமக்குடியில் கருட வாகனத்தில் முத்தாலம்மன் அருள்பாலிப்பு
ADDED :956 days ago
பரமக்குடி: பரமக்குடி முத்தாலம்மன் கோயில் பங்குனி விழாவில் எட்டாம் நாளான இன்று காலை அம்மன் கருட வாகனத்தில் அருள்பாலித்தார்.
பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மன் கோயில் பங்குனி திருவிழா நடந்து வருகிறது. இன்று காலை அம்மன் சங்கு, சக்கரம், கதை மற்றும் செங்கோல் ஏந்தி, ராஜாங்க திருக்கோலத்தில் பெருமாள் அவதாரத்தில் கருட வாகனத்தில் வீதி வலம் வந்தார். அப்போது நாட்டிய குதிரைகள் முன் செல்ல, மேள, தாளம் முழங்க எட்டாம் திருநாள் மண்டபடியை அடைந்தார். அங்கு இரவு முத்தாலம்மன் குதிரை வாகனத்தில் எழுந்தருளி அருள் பாலித்தார். தொடர்ந்து இரவு வான வேடிக்கைகள் முழங்க வலம் வந்த அம்மன் கோயிலை அடைந்தார். நாளை அக்னி சட்டி ஊர்வலம், இரவு மின் தீப தேரோட்டம் நடக்கிறது.