உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தணியில் பங்குனி உத்திரப் பெருவிழா : மூலவருக்கு சிறப்பு அபிஷேகம்

திருத்தணியில் பங்குனி உத்திரப் பெருவிழா : மூலவருக்கு சிறப்பு அபிஷேகம்

திருத்தணி, திருத்தணி முருகன் கோவிலில், பங்குனி உத்திரப் பெருவிழாவையொட்டி, அதிகாலை 5:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

தொடர்ந்து தங்கவேல், தங்க கிரீடம், வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது. காலை 9:00 மணிக்கு, நகரத்தார் திருத்தணி பாத யாத்திரை டிரஸ்ட் சார்பில், 90க்கும் மேற்பட்ட பக்தர்கள் மயில் காவடிகள், 200க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் எடுத்து, திருக்குளத்தில் இருந்து, படிகள் வழியாக மலைக்கோவிலுக்கு சென்றனர். பின், காவடி மண்டபத்தில் உற்சவர் முருகபெருமானுக்கு, விபூதி, நாட்டு சர்க்கரை, பஞ்சாமிர்தம் மற்றும் பால்குட அபிஷேகம் நடந்தது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால், பொதுவழியில் மூலவரை தரிசிக்க, நான்கு மணி நேரமானது. 100 ரூபாய் சிறப்பு தரிசன வழியில் ஒன்றரை மணி நேரத்திற்கு மேலானது. கொளுத்தும் வெயிலுக்கு, வசதியாக பக்தர்களுக்குமலைக்கோவில் தேர் வீதியில் வெள்ளை வர்ணம் பூசியும், தரைவிரிப்பு போடப்பட்டும் இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !