உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் செப்பு தேரோட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் செப்பு தேரோட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண திருவிழாவை முன்னிட்டு பங்குனி உத்திர திருநாளான இன்று செப்பு தேரோட்டம் வெகு விமர்சையாக நடந்தது.

இதனை முன்னிட்டு இன்று காலை 6:20 மணிக்கு, ஆண்டாள், ரெங்க மன்னார் கோயிலில் இருந்து புறப்பட்டு செப்பு தேருக்கு எழுந்தருளினர். அங்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் காலை 7:25 மணிக்கு செப்பு தேரோட்டம் துவங்கியது. கோவிந்தா, கோபாலா கோசத்துடன் ஏராளமான பெண் பக்தர்கள் தேரினை வடம் பிடித்து இழுத்தனர். கோயில் யானை முன் செல்ல நான்கு ரத வீதிகள் சுற்றி வந்து, ஒரு மணி நேரத்தில் தேர் நிலையம் அடைந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் முத்துராஜா, கோயில் பட்டர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !