உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஐய்யப்பன் கோயிலில் புஷ்பாஞ்சலி பூஜை

ஐய்யப்பன் கோயிலில் புஷ்பாஞ்சலி பூஜை

போடி: போடி ஐய்யப்பன் கோயிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு புஷ்பாஞ்சலி பூஜை ஐய்யப்ப பக்த சபை தலைவர் முனியாண்டி தலைமையில் நடந்தது. கணபதி ஹோமத்துடன், ஐய்யப்பனுக்கு 108 சங்கினால் அபிஷேகம், புஷ்பாஞ்சலியுடன் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாரதனைகள் நடந்தது. பக்த சபை செயலாளர் சங்கிலிகாளை, பொருளாளர் பாலு, நிர்வாகிகள் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஐய்யப்பனின் தரிசனம் பெற்றனர். சுவாமி அலங்காரத்தினை அர்ச்சகர் கமலக்கண்ணன் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !