உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வடபழநி ஆண்டவர் கோவிலில் பங்குனி உத்திர தெப்ப உற்சவம்

வடபழநி ஆண்டவர் கோவிலில் பங்குனி உத்திர தெப்ப உற்சவம்

சென்னை,சென்னை, வடபழநியில் ஆண்டவர் கோவிலில் இந்த ஆண்டிற்கான பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு, இன்று தெப்பத்தில் வடபழநி ஆண்டவர் புறப்பாடு நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் வடபழநி ஆண்டவர் அருள்பாலத்தார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை தரிசித்தனர்.

பங்குனி உத்திரமான நேற்று காலை தீர்த்தவாரி நடந்தது. பின், யாகசாலையில் பூர்ணாஹுதி பூர்த்தியானது. நண்பகல் மூலவருக்கு அபிஷேகம், வெள்ளி கவச அலங்காரம் நடந்தது. இரவு, வடபழநி ஆண்டவர் சிறப்பு அலங்காரத்துடன் சுவாமி வீதி உலா நடந்தது. பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு, இன்று முதல், 7ம் தேதி வரை மூன்று நாட்கள், இரவு 7:00 மணிக்கு தெப்பத் திருவிழா சிறப்பு அலங்காரம், வேதபாராயண, நாதஸ்வர கச்சேரி நடக்கிறது. இன்று தெப்பத்தில் வடபழநி ஆண்டவர் புறப்பாடு நடைபெற்றது. இரண்டாம் நாள் சண்முகர், வள்ளி, தெய்வானை புறப்பாடும், மூன்றாம் நாள் சுப்பிரமணியர் வள்ளி, தெய்வானை புறப்பாடும் நடக்கிறது. கோடை வெயில் அதிகம் காணப்பட்டதால் பக்தர்கள் வசதிக்காக கோவில் முகப்பில், லாரி வாயிலாக தண்ணீர் தெளித்து சாலை குளிர்விக்கப்பட்டது. கோவில் வளாகத்திலும் குடிநீர் வசதி செய்யப்பட்டிருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !