காளஹஸ்தி வந்த சனாதன தர்ம தலைவர்களுக்கு சிறப்பு வரவேற்பு
ADDED :1114 days ago
காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோயிலுக்கு இன்று இந்து சனாதன தர்ம தலைவர்கள் சாமி தரிசனம் செய்ய வந்தவர்களை சிறப்பு வரவேற்பு ஏற்பாடு செய்ததோடு சிறப்பு தரிசன ஏற்பாடுகளை கோயில் அதிகாரிகள் மற்றும் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு.தாரக சீனிவாசுலு செய்தனர். கோயிலுக்குள் சென்றவர்கள் காளஹஸ்தீஸ்வரரையும் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரையும் தரிசனம் செய்த பின்னர் கோயில் வளாகத்தில் உள்ள ஸ்ரீ மேதா குருதட்சிணாமூர்த்தி சன்னதியில் இந்து சனாதன தர்ம குருஜிக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்ததோடு, சுவாமி அம்மையார் களின் தீர்த்தப்பிரசாதங்களை வழங்கினர்.இந் நிகழ்ச்சியில் கோயில் அதிகாரிகள், பணியாளர்கள், வேத பண்டிதர்கள் கலந்து கொண்டனர்.