பரமக்குடி வட்டார முருகன் கோயில்களில் பங்குனி உத்திரம் கோலாகலம்
ADDED :960 days ago
பரமக்குடி: பரமக்குடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள முருகன் கோயில்களில் பங்குனி உத்திர விழா கோலாகலமாக நடந்தது.
பரமக்குடி சக்தி குமரன் செந்தில் கோயிலில் நேற்று முன்தினம் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. எமனேஸ்வரம் ஜீவா நகர் பால சுப்பிரமணிய சுவாமி கோயில் நேற்று மதியம் பூக்குழி உற்சவம் நடந்தது. தொடர்ந்து இரவு புஷ்ப அலங்காரத்தில் முருகன் அருள் பாலித்தார். பரமக்குடி தரைப்பாலம் அருகில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பால்குடம் மற்றும் காவடி எடுத்து பக்தர்கள் வழிபட்டனர். பரமக்குடி அருகே சத்திரக்குடி வளநாடு கிராமத்தில் கருப்ப பிள்ளை மடம் சுப்ரமணிய சுவாமி கோயில் மூலவர் வெள்ளி கவச அலங்காரத்தில் அருள் பாலித்தார்.