செஞ்சி காசி விஸ்வநாதர் கோவிலில் முருகனுக்கு வேல் சாற்றும் நிகழ்ச்சி
ADDED :960 days ago
செஞ்சி: செஞ்சி காசிவிஸ்வநாதர் கோவில் முருகருக்கு புதிதாக வேல் சாற்றும் நிகழ்ச்சி நடந்தது.
செஞ்சி சிறுகடம்பூர் காசி விஸ்வநாதர் கோவிலில் உள்ள முருகபெருமானுக்கு பங்குனி உத்திரத்தை முன்னிட்டு நேற்று புதிதாக வேல் சாற்றும் நிகழ்ச்சி நடந்தது. இதை முன்னிட்டு முருகபெருமானுக்கு விசேஷ அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்தனர். பழனியில் இருந்து கொண்டு வரப்பட்ட புதிய வேல் முருகப்பெருமானுக்கு சாத்தப்பட்டது. தொடர்ந்து சிறப்பு அர்ச்சனையும், மகா தீபாராதினையும் நடந்தது. இதில் திராளன பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு பிரசாத விநியோகம் நடந்தது.