அல்லிகுண்டம் முத்தாலம்மன் கோயிலில் சப்பர ஊர்வலம்
ADDED :1012 days ago
உசிலம்பட்டி: உசிலம்பட்டி அருகே அல்லிகுண்டம் கிராமத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் முத்தாலம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவில் முத்தாலம்மன் சிலை எடுத்து வந்து கோயிலில் வழிபாடு வைத்து சிறப்பு வழிபாடு நடந்தது. நேற்று மாலை நடந்த ஊர்வலத்தில் சுமார் 25 அடி உயர சப்பரம் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்கள் கைகளால் தூக்கி ஒவ்வொரு வீட்டு முன்பும் நிறுத்தி சிறப்பு வழிபாடு செய்தனர். பக்தர்கள் நேர்த்திக்கடனாக மாறு வேடங்களில் வந்தனர். தவழும் குழந்தை, கை, பாதம் உள்ளிட்ட மண் சுதைகள், முளைப்பாரி எடுத்து வழிபாடு செய்தனர்.