புனித வெள்ளி: 1000 அடி உயர குரூஸ் மலையேறி சிறப்பு பிரார்த்தனை
ADDED :1012 days ago
பந்தலூர்: பந்தலூரில் புனித வெள்ளியை முன்னிட்டு, குரூஸ் மலையேற்றம் நடந்தது.
இயேசு உயிர்நீத்ததாக கூறப்படும் நாளான இன்று கிறிஸ்தவர்கள் வெள்ளியாக அனுசரிக்கப்படுகிறது. இதில் பந்தலூர் புனித சேவியர் தேவாலயத்தின் சார்பில் பாதர் பெனட்டிட் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. தொடர்ந்து சிலுவையை பங்கு மக்கள் சுமந்து, பாதர் தலைமையில், சுமார் 1000 அடி உயரமுள்ள குரூஸ்மலையேற்றத்தில் ஈடுபட்டனர். விரதமிருந்த இறைமக்கள் இறைபாடல்களை பாடியபடி மலை உச்சியில் உள்ள சிலுவை முன்பாக கூடி சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். உலக அமைதி, நோயற்ற வாழ்க்கைக்கு பங்கு மக்கள் பிரார்த்தனை செய்தனர்.இதில் பந்தலூர் தாலுக்கா முழுவதும் உள்ள மக்கள் பங்கேற்றனர். தேவாலயம் திரும்பிய மக்களுக்கு நோன்பு கஞ்சி வழங்கப்பட்டது.