உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆண்டவர், மருந்தீஸ்வரர் கோவிலில் தெப்ப உற்சவம்

ஆண்டவர், மருந்தீஸ்வரர் கோவிலில் தெப்ப உற்சவம்

சென்னை, சென்னை, வடபழநி ஆண்டவர் கோவிலில் பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு, 1ம் தேதி முதல் மூன்று நாட்கள் லட்சார்ச்சனை நடந்தது.கடந்த, 4ம் தேதி முன்தினம் பங்குனி உத்திர விழா கொண்டாடப்பட்டது. அதனை முன்னிட்டு, இரவு, சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வீதி உலா நடந்தது. பங்குனி உத்திர விழாவின் ஒரு பகுதியாக மூன்று நாள் தெப்ப உற்சவம் 5ம் தேதி துவங்கியது. நேற்று வள்ளி, தெய்வானை சமதேராக சண்முகர் தெப்பத்தில் வலம் வந்து அருள்பாலித்தார். இன்று சுப்பிரமணியர் வள்ளி, தெய்வானை புறப்பாடு நடக்கிறது. மருந்தீஸ்வர் கோவில்: திருவான்மியூர் மருத்தீஸ்வரர் கோவிலில், கடந்த மாதம் 27ம் தேதி கொடியேற்றத்துடன் பங்குனிப் பெருவிழா துவங்கியது. மூன்றாம் நாள் அதிகார நந்தி சேவையும், ஏழாம் நாள் தேர் திருவிழாவும் நடந்தது. கடந்த, 4ம் தேதி கல்யாணசுந்தரர் திருக்கல்யாண வைபவம் விமரிசையாக நடந்தது. விழாவின் நிறைவு நாளான நேற்று மாலை சந்திரசேகரர் தெப்ப திருவிழா நடந்தது. இரவு, திரிபுரசுந்தரி தியாகராஜ சுவாமி திருமண விழா நடந்தது. தொடர்ந்து கொடியிறக்கத்துடன் விழா நிறைவு பெற்றது. பின், வால்மீகி முனிவருக்கு, 18 திருநடனக்காட்சியருளி வீடுபேறு அளித்தல் பெருஞ்சிறப்பு விழா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !