கோதண்டராமர் கோவிலில் திருக்கல்யாணம் உற்சவம்
ADDED :931 days ago
காரைக்கால்: காரைக்காலில் கோதண்டராம கோவிலில் திருக்கல்யாணம் உற்சவம் நடைபெற்றது.
காரைக்கால் கோவில்பத்து பகுதியில் உள்ள கோதண்டராமர் கோவில் உள்ளது. இக்கோவிலில் முக்கிய நாட்களில் பல்வேறு நிகழச்சிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதனால் ராமநவமியை முன்னிட்டு ஸ்தபனாங்க பஞ்ச ஹோமத்துடன் ராமநவமி உற்சவம் தொடங்கியது. தினம் சகஸ்ரநாமபூஜை உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.முக்கிய நிகழ்ச்சியான நேற்று முன்தினம் சீதாராமனுக்கு திருக்கல்யாணம் வைபவம் சிறப்பாக நடைபெற்றது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு கோதண்டராமரை வழிப்பட்டனர்.பின் அனைருக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.