காளஹஸ்தி சிவன் கோயிலில் பக்தர்களுக்கு மோர் வழங்கப்பட்டது
ADDED :992 days ago
காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம், ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் சாமி தரிசனம் செய்ய தினந் தோறும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். இந்நிலையில் தற்போது கோடையை கருத்தில் கொண்டு பக்தர்களின் வசதிக்காக வெப்பத்தை தணிக்கும் வகையில் கோயில் சார்பில் இன்று முதல் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் முதியோர்களுக்கும் குழந்தைகளுக்கும் பெரியோர்களுக்கும் சிறு குழந்தைகளுக்கும் மோர் வழங்கும் நிகழ்ச்சியை ஸ்ரீகாளஹஸ்தி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு தாரக சீனிவாசுலு தொடங்கி வைத்தார் இன்று முதல் ( திங்கட்கிழமை) 10.4.2023 இன்று முதல் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு மோர் வழங்கும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.