வாராஹி ஜெயந்தி; பக்தர்கள் வழிபாடு
ADDED :993 days ago
கோவை;ராமநாதபுரம் சவுரிபாளையம் பிரிவு, பழனியப்பா நகரிலுள்ள வாராஹி அம்மன் கோவிலில், நேற்று வாராஹி ஜெயந்தி விழா நடந்தது.நேற்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு, பச்சை நிற பட்டாடை அணிவிக்கப்பட்டு, பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.இலுப்பை எண்ணெய் ஊற்றி, அகல் தீபம் ஏற்றி பக்தர்கள் வழிபட்டனர்.