உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உலக நன்மை வேண்டி சிறப்பு பூஜை

உலக நன்மை வேண்டி சிறப்பு பூஜை

கோவை;கோவையில் செயல்பட்டு வரும் ஸ்ரீஜெகத்குரு டிரஸ்ட் சார்பில், உலக நலன் வேண்டியும், மழை பொழிய வேண்டும் என்ற வேண்டுதலை முன்னிறுத்தியும், வடவள்ளியிலுள்ள தனியார் அபார்ட்மென்ட் வளாகத்தில், சிறப்பு அனுஷ ஆராதனை பூஜைகள் நடைபெற்றன. ஸ்ரீ ஜெகத்குரு டிரஸ்ட் தலைவர் ராமகிருஷ்ண கனபாடிகள் தலைமையில் வருணஜெபம் நடந்தது. தொடர்ந்து மகாபெரியவர், ஆதிசங்கரர் ஆகியோர் எழுந்தருளுவிக்கப்பட்டனர். தேன், பால், இளநீர், சந்தனம், விபூதியால் அபிஷேகம் நடந்தது. முன்னதாக கணபதிபூஜை, 27 நட்சத்திரங்களுக்கு சங்கல்பம், உலக நன்மைக்காக மஹன்யாசஜெபம், ருத்ரஜெபம், சோடசஉபசாரம், ருத்ர அபிஷேகம் நடந்தது. ராமகிருஷ்ண கனபாடிகள் கூறுகையில், ”உலக நன்மை கருதியும், அனைவருக்கும் காரியசித்தி ஏற்படவும், அனுஷ ஆராதனை பூஜைகள் நடைபெற்றன,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !