புளியரை தெட்சிணாமூர்த்தி கோயிலில் 22ல் குருபெயர்ச்சி விழா
ADDED :940 days ago
செங்கோட்டை: புளியரை தெட்சிணாமூர்த்தி கோயிலில் வரும் 22ம்தேதி குருபெயர்ச்சி விழா நடக்கிறது. குருபகவான், வரும் 22ம்தேதி இரவு, மீன ராசியில் இருந்து, மேஷ ராசிக்கு பெயர்ச்சியாகிறார். இதனையொட்டி, செங்கோட்டை அருகேயுள்ள புளியரை சிவகாமியம்பாள் சமேத சதாசிவமூர்த்தி, தெட்சிணாமூர்த்தி கோயிலில் குருபெயர்ச்சி விழா வரும் 19ம்தேதி துவங்குகிறது. அன்று காலை 6மணிக்கு மகா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. காலை 6மணிக்கு துவங்கும் விழா , 21ம்தேதி வரை நடக்கிறது.