சித்திரை திருவிழா பங்கேற்க அழைப்பு
அன்னூர்: அன்னூரில் மூன்று நாள் சித்திரை திருவிழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அன்னூர் அ.மு. காலனியில் இளைஞர்கள் கூட்டமைப்பு மற்றும் எய்ம் பவுண்டேஷன் சார்பில் வரும் 14, 15, 16 ஆகிய மூன்று நாட்கள் சித்திரை திருவிழா நடைபெறுகிறது. வரும் 14ம் தேதி காலை 7:00 மணி முதல் 8:30 மணி வரை பெண்களுக்கான மெகா கோலப்போட்டி நடக்கிறது. குழந்தைகள், மற்றும் சிறுவர்களுக்கு தனித்தனியாக விளையாட்டு போட்டி நடக்கிறது. வீட்டுக்கு ஒரு மரம் நடுவோம் நிகழ்ச்சி 15ம் தேதி நடக்கிறது. மாலையில் பவளக்கொடி கும்மியாட்டம் நடக்கிறது. இதைத்தொடர்ந்து மாணவர்களின் சிலம்பாட்டமும், டிரம்ஸ் நிகழ்ச்சியும் நடக்கிறது. வரும் 16ம் தேதி ஆண்கள், பெண்கள் மற்றும் தம்பதியருக்கு என பல்வேறு போட்டிகள் நடக்கிறது. மாலையில் மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகளும் இன்னிசை நிகழ்ச்சியும் நடக்கிறது. விழாவில் பங்கேற்க இளைஞர் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.