உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முகவூர் தெற்கு மாரியம்மன் கோயில் திருவிழா

முகவூர் தெற்கு மாரியம்மன் கோயில் திருவிழா

தளவாய்புரம்: தளவாய்புரம் அருகே முகவூர் மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் திருவிழா வான வேடிக்கையுடன் நடந்தது.

முகவூர் தெற்கு தெரு மாரியம்மன் பங்குனி பொங்கல் விழா கடந்த மாதம் 20ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேர்த்திக்கடன் வேண்டிய பக்தர்கள் அன்று முதல் 21 நாட்கள் கரகம் எடுத்து கும்மி பாடல்கள் பாடினர். விழாவின் சிறப்பு நிகழ்வான பூக்குழி திருவிழா நேற்று மாலை 7:00 மணிக்கு துவங்கியது. முதல் நாள் பூக்குழி இறங்கும் பக்தர்கள் காப்பு கட்டி காலையில் அக்னி சட்டி, ஆயிரம் கண் பானை, முளைப்பாரி, பூப்பெட்டி என 300-க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக வந்தனர். மாலை 7:00 மணி அளவில் நூற்றுக்கணக்கான காப்பு கட்டிய பக்தர்கள் பூ இறங்கினர். இதனைத் தொடர்ந்து வான வேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது ஏற்பாடுகளை தெற்கு தெரு இந்து நாடார் உறவின் முறையின் விழா குழுவினர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !