கூத்தாடி அம்மன் பங்குனி திருவிழா
ADDED :1010 days ago
சிங்கம்புணரி: சிங்கம்புணரி கூத்தாடி அம்மன் கோயில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இக்கோயிலின் பங்குனித்திருவிழா ஏப்.4 ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தினமும் அம்மனுக்கு பல்வேறு வழிபாடு நடத்தப்பட்டது. பெண்கள் பூத்தட்டு எடுத்து வந்து அம்மனுக்கு பூச்சொரிதல் செய்தனர். நேற்று காலை 10:00 மணிக்கு பால்குட ஊர்வலம் நடந்தது. கோயிலில் இருந்து புறப்பட்ட ஊர்வலம் பெரிய கடை வீதி, காரைக்குடி வழியாக மீண்டும் கோவிலை வந்தடைந்தது. அங்கு அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. பக்தர்கள் அலகு குத்தி வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவு கோயில் முன்பாக பொங்கல் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.