காரைக்குடி முத்துமாரியம்மன் கோயிலில் உண்டியல் எண்ணும் பணி
ADDED :1016 days ago
காரைக்குடி: காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி பங்குனி திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். திருவிழா முடிந்ததை தொடர்ந்து நேற்று மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் உண்டியல் என்னும் பணி நடந்தது. உண்டியல் எண்ணும் பணி உதவி ஆணையர் செல்வராஜ் தலைமையில் நடந்தது. தக்கார் ஞானசேகரன், செயல் அலுவலர் மகேந்திர பூபதி, கணக்கர் அழகு பாண்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதில், ரூ. 16 லட்சத்து 23 ஆயிரத்து 700 இருந்தது. உண்டியல் எண்ணும் பணியில் வங்கி பணியாளர்கள், சேவை குழுவினர், கோயில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.