உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அலகுமலை முத்துக்குமார பாலகண்டாயுதபாணி கோவிலில் சித்திரை திருவிழா

அலகுமலை முத்துக்குமார பாலகண்டாயுதபாணி கோவிலில் சித்திரை திருவிழா

 பொங்கலூர்: சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு அலகுமலை முத்துக்குமார பாலகண்டாயுதபாணி கோவிலில் பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்துக்கொண்டு மலையை சுற்றி வலம் வந்தனர். பால தண்டாயுதபாணிக்கு, 16 வகை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. அர்த்தமண்டபம், பிரகார மண்டபத்தில் மலர்கள் மற்றும் பழங்களால் தோரணம் கட்டி அலங்கரிக்கப்பட்டிருந்தது. அலங்கார தரிசனம், மகா தீபாராதனை நடந்தது. கனி, விபூதி, பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. தமிழ் புத்தாண்டை வரவேற்கும் விதமாக பஞ்சாங்கம் படிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை திருப்பணி குழு தலைவர் சின்னு தலைமையிலான விழா குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !