நல்லேறு பூட்டுதல் விழா : உழவு கருவிகளை சாமி முன்பு வைத்து வழிபாடு
ADDED :910 days ago
கொட்டாம்பட்டி: கம்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட அலங்கம்பட்டி, பெரிய, சின்ன கற்பூரம்பட்டியில் உள்ள மந்தையம்மன் கோயில்களில் நேற்று தமிழ்புத்தாண்டை முன்னிட்டு நல்லேறு பூட்டுதல் விழா கொண்டாடப்பட்டது. இவ் விழாவில் விவசாயிகள் தங்கள் உழவு கருவிகளான புதிதாக கலப்பை, மண்வெட்டி, அருவாள் உள்ளிட்ட உபகரணங்களை சாமி முன்பு வைத்து மழை பெய்து எல்லா வளமும் கிடைக்க வேண்டி வழிபட்டனர். அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் தங்களுக்கு சொந்தமான வயல்களுக்கு சென்று உபகரணங்களை கொண்டு உழவு பணிகளை துவங்கினர்.