ரூ.4.50 லட்சத்தில் காப்பு அலங்காரம்: மாரியம்மன் கோயிலில் பக்தர்கள் ஏற்பாடு!
ADDED :4772 days ago
விருதுநகர்: விருதுநகர் துள்ளு மாரியம்மன் கோயிலில், 4. 50 லட்சம் ரூபாயில், அம்மனுக்கு காப்பு மற்றும் தனலெட்சுமி அலங்காரம் செய்யப்பட்டது. இங்குள்ள பாண்டியன் நகர் துள்ளு மாரியம்மன் கோயில், புரட்டாசி பொங்கல் விழா, 18ல் துவங்கியது. தினமும் அம்மனுக்கு அலங்கார பூஜைகள் நடந்து வருகிறது. விழாவின், நான்காம் நாளான நேற்று,4. 50 லட்சம் ரூபாயில் "காப்பு தனலெட்சுமி அலங்காரம் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர். இதற்காக, தங்கமணி காலனி பகுதி மக்களிடம் பணம் வசூல் செய்து, ரூபாயில் அலங்காரம் செய்துள்ளனர். பணம் செலுத்தியவர்களிடம், இன்று பணம் திருப்பி கொடுக்கப்படுகிறது. ஐந்தாம் நாளான இன்று, "வளையல் அலங்காரம் நடைபெறுகிறது. விழா 25 ம் தேதி முடிய எட்டுநாட்கள் நடக்கிறது.